அ.ம.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 60 தொகுதிகள் விருத்தாச்சலத்தில் பிரேமலதா விஜயகாந்த் போட்டி
அ.ம.மு.க. கூட்டணியில் சேர்ந்துள்ள தே.மு.தி.க.விற்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விருத்தாச்சலத்தில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார்.
சென்னை,
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த தே.மு.தி.க. சமீபத்தில் அந்த கூட்டணியில் இருந்து விலகியது. பா.ம.க.வுக்கு இணையாக தங்களுக்கு தொகுதிகளையும், கவுரவத்தையும் அ.தி.மு.க. அளிக்கவில்லை என்று அக்கட்சி அப்போது பகிரங்கமாக குற்றம்சாட்டியது. இதைத்தொடர்ந்து தே.மு.தி.க. தனித்து போட்டியிடுமா? அல்லது கமல்ஹாசன் தலைமையிலான அணியில் இணையுமா? என்ற யூகங்கள் எழுந்தன.
இந்த நிலையில் அ.ம.மு.க.வுடன் தே.மு.தி.க. பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் அ.ம.மு.க-தே.மு.தி.க. இடையே கூட்டணிக்கான ஒப்பந்தம் மற்றும் தொகுதி பங்கீடு ஏற்பட்டது. தே.மு.தி.க.வுக்கு 60 இடங்கள் ஒதுக்கப்பட்டது. இந்த 60 இடங்களுக்கும் உடனடியாக வேட்பாளர்களை தே.மு.தி.க. அறிவித்தது.
அதன் விவரம் வருமாறு:-
எழும்பூர்-பல்லாவரம்
1.கும்மிடிப்பூண்டி-டில்லி
2.திருத்தணி-கிருஷ்ணமூர்த்தி
3.ஆவடி-சங்கர்
4.வில்லிவாக்கம்-சுபமங்களம் டில்லிபாபு
5.திரு.வி.க.நகர்-சேகர்
6.எழும்பூர்-பிரபு
7.விருகம்பாக்கம்-பார்த்தசாரதி
8.சோழிங்கநல்லூர்-முருகன்
9.பல்லாவரம்-முருகேசன்
10.செய்யூர்-சிவா
திருக்கோவிலூர்
11.மதுராந்தகம்-மூர்த்தி
12.கே.வி.குப்பம்-தனசீலன்
13. ஊத்தாங்கரை-பாக்கியராஜ்
14.வேப்பனஹள்ளி-முருகேசன்
15.பாலக்கோடு-விஜயசங்கர்
16.பென்னாகரம்-விஜயகுமார்
17.செங்கம்-அன்பு
18.கலசபாக்கம்-நேரு
19.ஆரணி-பாஸ்கரன்
20.மைலம்-சுந்தரேசன்
21.திண்டிவனம்-சந்திரலேகா
22. வானூர்-கணபதி
23.திருக்கோவிலூர்-வெங்கடேசன்
24.கள்ளக்குறிச்சி-விஜயகுமார்
25.ஏற்காடு-குமார்
நிலக்கோட்டை
26.மேட்டூர்-ரமேஷ் அரவிந்த்
27.சேலம் மேற்கு-அழகாபுரம் மோகன்ராஜ்
28. நாமக்கல்-செல்வி
29.குமாரப்பாளையம்-சிவசுப்பிரமணியன்
30.பெருந்துறை-குழந்தை வேலு
31.பவானிசாகர்-ரமேஷ்
32.கூடலூர்-லோகேஸ்வரன்
33 அவினாசி-மீரா
34.திருப்பூர் வடக்கு-செல்வகுமார்
35.வால்பாறை-முருகராஜ்
36.ஒட்டன்சத்திரம்-மாதவன்
37.நிலக்கோட்டை-ராமசாமி
38.கரூர்-ரவி
39.கிருஷ்ணராயபுரம்-கதிர்வேல்
40.மணப்பாறை-கிருஷ்ணகோபால்
பிரேமலதா விஜயகாந்த்
41,திருவெறும்பூர்-செந்தில்குமார்
42.முசிறி-குமார்
43. பெரம்பலூர்-ராஜேந்திரன்
44. திட்டக்குடி-உமாநாத்
45.விருத்தாச்சலம்-பிரேமலதா விஜயகாந்த்
46.பண்ருட்டி-சிவக்கொழுந்து
47. கடலூர்-ஞானபண்டிதன்
48. கீழ்வேளூர்-பிரபாகரன்
49. பேராவூரணி-முத்துசிவக்குமார்.
50. புதுக்கோட்டை -சுப்பரமணியன்
51. சோழவந்தான்-ஜெயலட்சுமி
52. மதுரை மேற்கு-பாலசந்தர்
53. அருப்புக்கோட்டை-ரமேஷ்
54. பரமக்குடி-சந்திரபிரகாஷ்
55. தூத்துக்குடி- எஸ்.எஸ்.எஸ்.யு.சந்திரன்
56. ஒட்டப்பிடாரம்-ஆறுமுகநயினார்
57.ஆலங்குளம்-ராஜேந்திரநாதன்
58. ராதாபுரம்-ஜெயபால்
59.குளச்சல்-சிவக்குமார்
60.விளவங்கோடு-ஐடன்சோனி
விஜயகாந்த் தொகுதியில் பிரேமலதா
தே.மு.தி.க. பொருளாளராக இருக்கும் பிரேமலதா விஜயகாந்த் இதுவரை தேர்தலில் போட்டியிட்டது இல்லை. முதல் முறையாக அதுவும் தனது கணவர் முதல் முறையாக வெற்றி வாகை சூடிய விருத்தாச்சலம் தொகுதியில் இருந்து தனது அரசியல் பயணத்தை முன்னெடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த் இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை.