திமுக-வில் இருந்து விலகி இன்று காலை பாஜக-வில் இணைந்த எம்.எல்.ஏ.சரவணன் பாஜக வேட்பாளராக அறிவிப்பு...!
திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வான சரவணன் இன்று காலை பாஜகவில் இணைந்தார். அவர் மதுரை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.;
சென்னை,
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக-வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. டெல்லியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து அப்பட்டியலை வெளியிட்டார்.
20 தொகுதிகளில் 17 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்களை அவர் வெளியிட்டார்.
பாஜக வேட்பாளர் பட்டியல்,
தாராபுரம் - எல்.முருகன்
கோவை தெற்கு - வானதி சீனிவாசன்
அரவக்குறிச்சி - அண்ணாமலை
காரைக்குடி - ஹெச்.ராஜா
ஆயிரம் விளக்கு - குஷ்பூ
திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்
குளச்சல் - ரமேஷ்
நாகர்கோவில் - காந்தி
மொடக்குறிச்சி - சரஸ்வதி
திட்டக்குடி - பெரியசாமி
திருவையாறு - வெங்கடேசன்
விருதுநகர் - பாண்டுரங்கன்
ராமநாதபுரம் - குப்புராம்
துறைமுகம் - வினோஜ் செல்வம்
திருவண்ணாமலை - தணிகைவேல்
திருக்கோவிலூர் - கலிவரதன்
மதுரை வடக்கு - சரவணன்
இந்நிலையில், 2019 ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றவர் சரவணன். இவருக்கு வரும் சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் அவர் இன்று காலை பாஜகவில் இணைந்தார். சென்னையில் பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் முன்னிலையில் சரவணன் இன்று காலை பாஜகவில் இணைந்தார்.
திமுக-வில் இருந்து விலகி இன்று காலை பாஜகவில் இணைந்த எம்.எல்.ஏ. சரவணனுக்கு மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது. இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.