மத்திய அரசு செய்து கொண்டிருக்கும் திட்டங்களை திமுக தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளது - பாஜக மாநில தலைவர் எல்.முருகன்
மத்திய அரசு செய்து கொண்டிருக்கும் திட்டங்களை திமுக தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளது என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
சென்னை,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் பிரசாரம், தொகுதி பங்கீடு, கூட்டணி, தேர்தல் அறிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன.
அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. பாஜக-வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
நேற்று திராவிட முன்னேற்றக்கழகத்தினுடைய தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த தேர்தல் அறிக்கை பொய்யும், புரட்டும் கொண்ட தேர்தல் அறிக்கையாக உள்ளது. அதேபோல் அந்த தேர்தல் அறிக்கையில் சொல்வது ஒன்றாக உள்ளது, ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் கொள்ளை அடிப்பதில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
அந்த தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றுகின்ற தேர்தல் அறிக்கை. திமுகவினர் சொல்வார்கள், ஆனால் செய்யமாட்டார்கள். மத்திய அரசின் திட்டங்களை திமுக தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளது. மத்திய அரசு தற்போது செய்துகொண்டிருக்கும் திட்டங்களை திமுக தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுளது. பாஜகவின் நோக்கம் ஊழலற்ற ஆட்சி, அதை நிச்சயம் கொடுப்போம்.
என்றார்.