எடப்பாடி பழனிசாமி நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார்
எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்.;
சேலம்,
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிடுகிறார்கள்.
இதையடுத்து இன்று இரவே அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் புறப்படுகிறார். சேலம் செல்லும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (திங்கட்கிழமை) பிற்பகல் 12 மணி அளவில் தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார். அதைப்போலவே அ.தி.மு.க. வேட்பாளர்கள் பலரும் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினமே போடி நாயக்கனூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார்.