முன்னாள் எம் எல் ஏக்கள் 2 பேர் அ.ம.மு.க வில் இருந்து விலகி முதலமைச்சர் பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்

அ.ம.மு.க வில் இருந்து விலகி முன்னாள் எம் எல் ஏக்கள் இரண்டு பேர் ,முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர்.

Update: 2021-03-13 16:47 GMT
சேலம்

சேலத்தில் 2 ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அம்மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பிரசாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் அ.ம.மு.க வில் இருந்து விலகி முன்னாள் எம் எல் ஏக்கள் இரண்டு பேர் ,முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர்.

நிலக்கோட்டை தங்கதுரை, பரமக்குடி முத்தையா இருவரும் சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முதலமைச்சரை சந்தித்தனர். இருவருக்கும் சால்வை அணிவித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.

அதிமுகவில் தங்களை மீண்டும் இணைத்துக் கொண்டுள்ள இவ்விருவரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களில் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்