முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 3 வது கட்டமாக 17 தொகுதிகளில் 2 நாட்கள் பிரசாரம்

முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 3 வது கட்டமாக 17 தொகுதிகளில் 2 நாட்கள் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

Update: 2021-03-13 14:45 GMT
சேலம்

சேலத்தில் 2 ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அம்மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பிரசாரம் செய்து வருகிறார்.

இந்த் நிலையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  3வது கட்டமாக 17 தொகுதிகளில் 2 நாட்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 16-ந் தேதி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஆதரவாக விராலிமலை தொகுதியில் பிரசாரத்தை தொடங்கும் முதல்வர், 17-ந் தேதி திருவையாறு தொகுதியில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

மேலும் செய்திகள்