ஸ்டாலினால் அறிக்கை மட்டுமே வெளியிட முடியும் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு

திமுக தலைவர் ஸ்டாலினால் அறிக்கை மட்டுமே வெளியிட முடியும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.;

Update: 2021-03-13 05:15 GMT
மதுரை,

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் பிரசாரம், தொகுதி பங்கீடு, கூட்டணி உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. 

அந்த வகையில், அதிமுக தாங்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதேபோல், திமுக-வும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நேற்று அறிவித்தது.

அதில், மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் அதிமுக சார்பில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் திமுக சார்பில் மணிமாறன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று திருமங்கலம் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், திமுக தலைவர் முக ஸ்டாலினால் அறிக்கை மட்டுமே வெளியிட முடியும், முதல்வர் பழனிசாமி தான் அரசாணை வெளியிடுவார்’ என்றார்.

மேலும் செய்திகள்