மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு கமல்ஹாசன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

Update: 2021-03-12 22:53 GMT
சென்னை, 

மக்கள் நீதி மய்யம் தலைமையிலான மக்களின் முதல் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே 111 சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது. தமிழக மக்கள் ஜனநாயக கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம்.சரீப் ஆகியோர் நேற்று கையெழுத்திட்டுள்ளனர்.

இதுகுறித்து கே.எம்.சரீப் நிருபர்களிடம் கூறுகையில், திருப்பத்தூர், விழுப்புரம், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், திருச்சி மேற்கு, பூம்புகார், அறந்தாங்கி, மானாமதுரை (தனி), சிவகாசி மற்றும் சங்கரன்கோவில் ஆகிய தொகுதிகள் எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளில் நிச்சயம் மக்களின் அபிமானத்தை வென்று, வாக்குகள் பெற்று வெற்றி பெறுவோம். கமல்ஹாசன் தலைமையில் நிச்சயம் நல்ல ஆட்சி தமிழகத்தில் அமையும் என்றார்.

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளிலும் ‘டார்ச் லைட்' சின்னத்தில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்