புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டி
புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் பாமக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
புதுச்சேரி
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் பாஜக, அதிமுக கட்சிகள் வரும் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜக, அதிமுகவுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 3 கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்திக்கும். பாமக இதில் இடம்பெறவில்லை.
5 தொகுதிகளை ஒதுக்க கோரிய பாமகவிற்கு, ஒரு தொகுதியும் ஒதுக்கப்படாததால் அதிருப்தி அடைந்துள்ளது
இதை தொடர்ந்து புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் பாமக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
30 தொகுதிகளிலும் பாமக தனித்து போட்டியிடும் என புதுச்சேரி மாநில பாமக துணைத் தலைவர் சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டசபை தேர்தலில், அதிமுக கூட்டணியில், பாஜகவுடன் இணைந்து பாமக தேர்தலை சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.