இல்லத்தரசிகளுக்கு மாத சம்பளம் என்பதை அறிவித்த ஒரே கட்சி ம.நீ.ம. - கமல்ஹாசன் பேச்சு

இல்லத்தரசிகளுக்கு மாத சம்பளம் என்பதை அறிவித்த ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.;

Update: 2021-03-06 12:31 GMT
சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. மேலும், கட்சி தலைவர்கள் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று கோடம்பாக்கம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரசார நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கூறியதாவது:-

*இங்கு கூடியிருப்பது தானாக சேர்ந்த கூட்டம்.

*மக்கள் ஆதரவுடன் நாட்டை கைப்பற்ற வேண்டும் என்பதே ஆசை.

*இல்லத்தரசிகளுக்கு மாத சம்பளம் என்பதை அறிவித்த ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம்.

*செய்யக்கூடியதை மட்டுமே நாங்கள் சொல்லி கொண்டிருக்கிறோம்.

என்றார்.

மேலும் செய்திகள்