பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு: தேர்தல் ஆணையம்

சட்டப்பேரவைத் தேர்தலில் பாமகவுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2021-03-06 11:24 GMT
சென்னை,

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, வக்கீல் பாலு உள்ளிட்டோர் நேற்று இரவு சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு வந்தனர். அவர்களுடன், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தொகுதி ஒதுக்கீடு செய்வது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.

இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பாமகவிற்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கீடு செய்தது தேர்தல் ஆணையம். இதனால், அதிமுக கூட்டணியில் உள்ள பாமக 23 தொகுதிகளிலும் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளது.

அதிமுக கூட்டணியில் இதுவரை பாமகவிற்கு 23, பாஜகவிக்ரு 20 தொகுதிகள் சட்டப்பேரவையில் தேர்தலில் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்