திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி: மக்கள் நீதி மய்ய கூட்டணிக்கு மீண்டும் அழைப்பு
திமுக - காங்கிர கூட்டணியில் இழுபறி நீடித்து வருவதால் மக்கள் நீதி மய்ய கூட்டணிக்கு வருமாறு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.;
சென்னை
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் 180 தொகுதிகள் வரை நின்றால்தான் திமுகவால் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க முடியும். அதனால் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்வதில் திமுக கடுமை காட்டி வருகிறது.
அதனால், 5 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்த கட்சிகளுக்கு இடையே முரண்பாடு முற்றியுள்ளது. காங்கிரஸ் தரப்பில் 41 தொகுதிகள் வரை கேட்கப்பட்டு, பிறகு 30 தொகுதிகள் வரை இறங்கி வந்துள்ளது. ஆனால், திமுக தரப்பில் காங்கிரசுக்கு 15 தொகுதிகளில் தொடங்கி படிப்படியாக உயா்ந்து 18 தொகுதிகள் வரை வந்துள்ளது.
டி.ஆா்.பாலு தலைமையிலான திமுக குழுவினருடன் கே.எஸ்.அழகிரி தலைமையிலான குழுவினா் 2-ஆம் கட்டப் பேச்சுவாா்த்தையைச் செவ்வாய்க்கிழமை நடத்தினா். ஆனால் சுமூக முடிவு எட்டப்படவில்லை.
அன்று மாலை மாலை, ராகுல் காந்தி அழகிரியுடன் பேசினார், மேலும் கட்சியின் உள் கூட்டத்தில் அவர் பேசியதைப் பாராட்டினார். ஆனால் சரியான எண்ணிக்கையில் இடங்களைப் பெறுவதன் மூலம் கூட்டணியைத் தக்க வைத்துக் கொள்ளுமாறு அவர் மாநில வலியுறுத்தினார், என்று ஒரு காங்கிரஸ் தலைவர் கூறினார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை தொடர்ந்து வரும் நிலையில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை
அதைத் தொடா்ந்து, தினேஷ் குண்டுராவ் காங்கிரஸ் நிா்வாகிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் நிா்வாகிகள் திமுக கொடுக்கும் தொகுதிகளை ஏற்கலாம் என ஒரு தரப்பும், கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகளை கேட்டு வாங்க வேண்டும் என்று மற்றொரு தரப்பும் கூறினர்.
இதுகுறித்து அடுத்தகட்ட நடவடிக்கையாக என்ன செய்யலாம் என்பது குறித்து காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசும்போது நாம் கூட்டணியில் கடந்த 15 ஆண்டுகளாக அங்கம் வகித்து வருகிறோம். வரும் சட்டமன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிட உள்ளோம். அதிக தொகுதி ஒதுக்குவார்கள் என எண்ணினோம். ஆனால் தொகுதி எண்ணிக்கை குறைவு என்பதை விட நம்மை நடத்தும் விதம் ... என பேச்சை நிறுத்திவிட்டு கண்கலங்கினார்.
தொடர்ந்த கே.எஸ். அழகிரி, இனிமேல் நான் பேச்சுவார்த்தைக்கு வர மாட்டேன். நீங்களே சென்று பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு சொல்லுங்கள். கையெழுத்திட வருகிறேன் என்றார்.
இந்நிலையில், திமுக உடனான தொகுதி பங்கீடு குறித்து கட்சியினருடனான ஆலோசனையின்போது கே.எஸ் அழகிரி கண்ணீர் விட்டதாக வெளியான தகவல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ”கண் இருந்தால் கண்ணீர் வரத்தான் செய்யும்” என்று தெரிவித்தார்.
இதனிடையே, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி மூன்றாம் அணி அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி தற்போது சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தால் நல்லது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் மாறுதலுக்கு தயாராகிவிட்டனர். காங்கிரஸ் வந்தால் அவர்களுக்கு நல்லது. அவர்கள் வருகிறார்களா என்று அவர்களை தான் கேட்க வேண்டும். ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதை இப்போது கூறமுடியாது என கூறினார்.