திமுக - மார்க்சிஸ்ட் இடையே நாளை காலை மீண்டும் பேச்சுவார்த்தை
திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே நாளை காலை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணி கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 3, மனிதநேய மக்கள் கட்சி – 2, விடுதலை சிறுத்தைகள் – 6, இந்திய கம்யூனிஸ்ட் – 6 ஆகிய தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளது. காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றிற்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யவில்லை.
தமிழக சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுள்ளது. ஆனால், 6 தொகுதிகள் வரை வழங்க திமுக முன்வந்த நிலையில் திமுக -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே தொகுதிப்பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில், திமுக – மார்க்சிஸ்ட் இடையே நாளை காலை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளன. சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தவுள்ளது.