மார்ச் 10-ல் திமுகவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மார்ச் 10-ல் திமுகவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Update: 2021-03-05 12:20 GMT
சென்னை,

தமிழகத்தில் ஏப். 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் ஒருமாத காலமே உள்ள நிலையில், திமுக கூட்டணியில் இதுவரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

இந்திய கம்யூ.கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிப் பங்கீடு குறித்து இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மார்ச் 10-ல் திமுகவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில்,

"மார்ச் 7 இல் லட்சியப் பிரகடனம் வெளியீடு; மார்ச் 10-ல் திமுகவின் வெற்றி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு; மார்ச் 11-ல் களத்தின் கதாநாயகனான திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு. அதன்பின் பரப்புரைப் பயணம் எனப் புயல் வேகத்தில் செயல்பட வேண்டிய பொறுப்பிலே இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்