தொகுதி கண்ணோட்டம்: மண்ணாடிப்பட்டு

புதுச்சேரி மாநிலமானது இந்திய ஆளுகைக்குள் வந்தபின் இந்திய தேர்தல் ஆணையம் 14-வது முறையாக சட்டமன்ற தேர்தலை நடத்துகிறது. வருகிற ஏப்ரல் 6-ந்தேதி நடைபெற உள்ள தேர்தல் தொடர்பாக தொகுதிகளின் நிலவரங்களை இங்கு பார்ப்போம்.

Update: 2021-03-05 06:10 GMT
புதுவை மாநிலத்தின் முதல் சட்டமன்ற தொகுதியாக மண்ணாடிப்பட்டு தொகுதி உள்ளது. இந்த தொகுதியானது 1964-ம் ஆண்டு முதலே உள்ளது. அந்த காலகட்டத்தில் இந்த தொகுதியானது 7 ஆயிரத்து 912 வாக்காளர்களை மட்டும் கொண்டிருந்தது. ஆனால் தற்போது 32 ஆயிரத்து 324 வாக்காளர்களுடன் உள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் டி.ராமச்சந்திரனை உருவாக்கிய தொகுதி என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.

இந்த தொகுதி மக்களின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. தொகுதியின் பெயர் சொல்லும் விதமாக லிங்காரெட்டிபாளையத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. ஆனால் இந்த ஆலையும் மூடப்பட்டுள்ளது. இதனால் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் மிகவும் வேதனையில் உள்ளனர்.

அதுமட்டுமின்றி தொகுதி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு என்பதும் குறைவாகவே உள்ளது. வேலைவாய்ப்பினை தரும் தொழிற்சாலைகள் என்று பெயர் சொல்லும்படி எதுவும் இல்லை. எனவே இளைஞர்கள் வேலைவாய்ப்பினை எதிர்பார்த்து உள்ளனர்.

தொகுதியில் பி.எஸ்.பாளையம், வாதானூர், மண்ணாடிப்பட்டு, கூனிச்சம்பட்டு, செட்டிப்பட்டு, மணலிப்பட்டு, கொடாத்தூர், தேத்தாம்பாக்கம், காட்டேரிக்குப்பம், சுத்துக்கேணி போன்ற பகுதிகள் உள்ளன. இங்கு பெருமளவு வன்னியர் சமுதாய மக்கள் வசிக்கின்றனர். அடுத்தபடியாக தாழ்த்தப்பட்ட மக்களும் வசிக்கின்றனர். குறிப்பிடத்தக்க அளவுக்கு சிறுபான்மை முஸ்லிம்களும் உள்ளனர்.

இந்த தொகுதியில் தி.மு.க. 4 முறையும், அ.தி.மு.க. 3 முறையும், காங்கிரஸ் 2 முறையும், த.மா.கா., பா.ம.க. ஆகிய கட்சிகள் தலா ஒருமுறையும் வெற்றிபெற்றுள்ளன. கடந்த 2 தேர்தல்களில் தொடர்ச்சியாக என்.ஆர்.காங்கிரஸ் வெற்றிபெற்று வந்துள்ளது.

இந்த முறை தொகுதியை கைப்பற்ற கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இதில் வெற்றிபெறப்போவது யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:

1. மண்ணாடிப்பட்டு (என்.ஆர்.காங். வெற்றி)

மொத்த வாக்குகள் - 30,697

பதிவான வாக்குகள் - 27,586

1. டி.பி.ஆர்.செல்வம் (என்.ஆர்.காங்.) -7,679

2. கிரு‌‌ஷ்ணன் (தி.மு.க.) -7260

3. மகாதேவி (அ.தி.மு.க.) -5,676

4. அருள்முருகன் (சுயே) -4,913

5. கந்தன் நாராயணசாமி (சுயே) -784

6. வெங்கடேசன் (பா.ம.க.) -260

7. கார்த்திகேயன் (தே.மு.தி.க.) -220

8. சதாசிவம் (பா.ஜனதா) -211

9. புருஷோத்தமன் (பகுஜன்சமாஜ்) -85

10. முருகானந்தம் (சுயே) -56

11. முத்துக்குமரன் (ஐ.ஜே.கே.) -53

12. பூமிலிங்கம் (ஏ.ஐ.எம்.கே.) -47

நோட்டா -316

கடந்த காலங்களில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள் வருமாறு:

1964- மாணிக்கவாசக ரெட்டியார் - காங்

1969- சுப்புராயன் -தி.மு.க.

1974- டி.ராமச்சந்திரன் -அ.தி.மு.க.

1977- டி.ராமச்சந்திரன் -அ.தி.மு.க.

1980- டி.ராமச்சந்திரன் -தி.மு.க.

1985- டி.ராமச்சந்திரன் -தி.மு.க.

1990- டி.ராமசந்திரன் -தி.மு.க.

1991- ராஜசேகர உடையார் -காங்.

1996- ராஜசேகர உடையார் -த.மா.கா.

2001- டி.ராமச்சந்திரன் -அ.தி.மு.க.

2006- அருள்முருகன் -பா.ம.க.

2011- டி.பி.ஆர்.செல்வம் -என்.ஆர்.காங்

2016- டி.பி.ஆர்.செல்வம் -என்.ஆர்.காங்

மேலும் செய்திகள்