அதிமுகவுடன் கூட்டணி இல்லை ; அமமுக தலைமையில் புதிய கூட்டணி -டிடிவி தினகரன் அதிரடி

அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்றும் அமமுக தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் எனவும் டிடிவி தினகரன் அதிரடியாக அறிவித்துள்ளார்.;

Update:2021-03-02 13:43 IST

சென்னை

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னை தி.நகர் இல்லத்தில், சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினார் 

பின்னர் அவர் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்றும் அமமுக தலைமையில் புதிய கூட்டணி என கூறினார். மேலும், திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் செய்வதே தங்களின் முக்கியப் பணி எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.அமமுக என்ன மாதிரியான முடிவு எடுக்கும் என்பது குறித்து ஓரிரு நாளில் தெரிவிக்கப்படும் எனவும் கூறினார்.

அதிமுக- அமமுக இணைப்பு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது என டிடிவி பதிலளித்தார்

இந்நிலையில், நாளை முதல் அமமுக விருப்ப மனு விநியோகம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

அதில், 3-03-2021 முதல் 10-03-2021 வரையில் காலை 10 மணி முதல் மாலை 6 வரை விருப்ப மனு பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருப்ப மனுவுக்கான கட்டண தொகையாக, தமிழ்நாட்டிற்கு 10 ஆயிரம் ரூபாயும், புதுச்சேரிக்கு 5 ஆயிரம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்