மண்டல விளையாட்டு போட்டி தொடங்கியது

மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் பள்ளியில் மண்டல விளையாட்டு போட்டி தொடங்கியது.

Update: 2022-08-23 19:30 GMT

மாரண்டஅள்ளி:-

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடங்கின. போட்டிகளை பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியர் சேகர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கைப்பந்து, கபடி, கோகோ, ஆக்கி, கூடைப்பந்து உளிட்ட பல்வேறு போட்டிகள் நடக்கின்றன. போட்டியில் மண்டல அளவிலான ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். போட்டியில் வெற்றி பெறும் அணிகளை தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்பட உள்ளன. வெற்றி பெறும் அணிகள், அடுத்த மாதம் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கு பெறுவார்கள் என்று உடற்கல்வி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்