திருக்கோவிலூர் அருகே ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது மினிலாரி பறிமுதல்

திருக்கோவிலூர் அருகே மினிலாரியில் ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-16 18:45 GMT

திருக்கோவிலூர், 

அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் திருக்கோவிலூர் அடுத்த மணம்பூண்டி மேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், தலா 50 கிலோ எடை கொண்ட 35 சாக்கு மூட்டைகளில்1,750 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மினிலாரியை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவர் நாகை மாவட்டத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பதும், மினிலாரியில் ரேஷன் அரியை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து மோகன்ராஜை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தி வரப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் அதனை கடத்த பயன்படு்த்தப்பட்ட மினிலாரியை போலீசார் பறிமுதல் செய்து, விழுப்புரம் மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்