மதுபாட்டிலால் குத்தி வாலிபர் கொலை

குரும்பூர் அருகே மதுபாட்டிலால் குத்தி வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-08-29 14:57 GMT

தென்திருப்பேரை:

குரும்பூர் அருகே மதுபாட்டிலால் குத்தி வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

வாலிபர்

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே தண்ணீர்பந்தல் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள சாஸ்தா கோவிலையொட்டி 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உடலில் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து உடனடியாக குரும்பூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு பிணமாக கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

குத்திக்கொலை

தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் பிணமாக கிடந்தவர் தூத்துக்குடி-எட்டயபுரம் சாலையில் உள்ள சங்கராபேரியைச் சேர்ந்த மாடசாமி மகன் விக்னேஷ் (வயது 20) என்பதும், மர்மநபர்கள் மதுபாட்டிலால் குத்திக்கொலை செய்ததும் தெரியவந்தது.

ஆனால் எதற்காக இந்த கொலை நடந்தது. மர்மநபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

குரும்பூர் அருகே மதுபாட்டிலால் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

--------------

Tags:    

மேலும் செய்திகள்