தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டு வந்த வாலிபர் கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருந்து 15 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.

Update: 2022-11-06 16:53 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டு வந்த வாலிபர் கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருந்து 15 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.

தொடர் திருட்டு

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் வழிப்பறி மற்றும் ஜோலார்பேட்டை, பெரியகரம், கண்ணாலபட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய வழக்கில் குற்றவாளியை பிடிக்க திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த வாலிபரை டவுன் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். அவரை திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

வாலிபர் கைது

விசாரணையில் அவர் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஹபிப் ரஹ்மான் மகன் அப்துல் பாஷா (வயது 33) என்பது தெரியவந்தது. மேலும் அவர் திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து 15 பவுன் நகையை மீட்டனர்.

தொடர்ந்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல் பாஷாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர் திருட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீசாரை, போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்