போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-07-12 16:25 GMT

நத்தம் அருகே உள்ள ஏரக்காபட்டியை சேர்ந்தவர் லக்கன் (வயது 32). இவர், 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார், நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனிசாமி போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து லக்கனை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்