போக்சோவில் வாலிபர் கைது

கொள்ளிடத்தில் போக்சோவில் வாலிபர் கைது செய்யப்பட்டார்

Update: 2023-05-08 18:45 GMT

கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியை சேர்ந்த 16 வயது இளம் பெண்ணை தைக்கால் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த 4-ந் தேதி மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று விட்டதாக பெண்ணின் தாய் கொள்ளிடம் போலீசில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சிதம்பரம் பகுதியில் சுற்றி திரிந்த இளம்பெண், வாலிபர் இருவரையும் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் இளம் பெண்ணை அழைத்துச் சென்ற வாலிபர் கொள்ளிடம் அருகே உள்ள தைக்கால் கிராமம் ஜின்னா தெருவை சேர்ந்த அப்துல்சாலி மகன் அப்துல்ரியாசுதீன் (வயது 26) என்பதும் இளம் பெண்ணை கடந்த மூன்று மாத காலமாக காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரியாசுதீனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்