போக்சோவில் வாலிபர் கைது

போக்சோவில் வாலிபர் கைது

Update: 2022-11-23 18:45 GMT

கூடலூர்

நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரை உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டபோது, சிறுமி கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதை கேட்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தபோது, அதே பகுதியை சேர்ந்த பிரியதர்ஷன்(வயது 25) என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுசீலா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து பிரியதர்ஷனை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்