போக்சோவில் வாலிபர் கைது

வருசநாடு அருகே போக்சோவில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-19 22:30 GMT

வருசநாடு அருகே உள்ள தர்மராஜபுரத்தை சேர்ந்தவர் ஸ்ரீநாத் (வயது 27). இவருக்கு 11-ம் வகுப்பு படிக்கும் 15 வயது பள்ளி மாணவியிடம் பேசி பழகியதாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஸ்ரீநாத் மாணவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், கடமலைக்குண்டு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீநாத்தை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்