குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
திருப்பரங்குன்றத்தை சேர்ந்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருப்பரங்குன்றம் தென்பரங்குன்றம் பி.டி.ஆர். நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36). இவர் மீது, நகரின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் இவர், பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகமான வகையில் செயல்பட்டு வந்துள்ளார். இதனால், இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில், மணிகண்டன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.