பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
சீவலப்பேரியில் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சீவலப்பேரி:
நெல்லை அருகே சீவலப்பேரி கோட்டை தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 29). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி (39) என்பவருக்கும் நீண்ட காலமாக நடைபாதை சம்பந்தமாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று பாக்கியலட்சுமி வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த ராஜகோபால், பாக்கியலட்சுமியையும், அவரது மகளையும் இனிமேல் நடைபாதையை பயன்படுத்தக்கூடாது என்று கூறி, அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து பாக்கியலட்சுமி சீவலப்பேரி போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த ராஜகோபாலை கைது செய்தார்.