நெகமம்
பொள்ளாச்சியை அடுத்த ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்தவர் அஜீத்(வயது 26). இவர் கடந்த மாதம் நெகமத்தை அடுத்த செட்டியக்காபாளையத்தில் தேவணாம்பாளையம் செல்லும் ரோட்டில் உள்ள ஒரு தோட்டத்தில் கட்டி வைத்திருந்த ஆடு ஒன்றை திருடிச்சென்றார். இதுகுறித்து நெகமம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தலைமறைவாக இருந்த அஜீத்தை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். இந்தநிலையில் நேற்று ஜமீன் ஊத்துக்குளி பஸ் நிலையம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த நிலையில், அங்கு பதுங்கி இருந்த அஜீத்தை கைது செய்தனர்.