போதை மாத்திரைகள் பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது

போதை மாத்திரைகள் பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-12 20:11 GMT

போதை மாத்திரை

திருச்சி கருமண்டபம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர், கருமண்டபம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 23) என்பதும், இவர் போதை மாத்திரைகளை உறையூரை சேர்ந்த ஒரு நபரிடம் இருந்து வாங்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

கைது

இது குறித்து வழக்குப்பதிவு செய்த கண்டோன்மெண்ட் போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து உறையூரை சேர்ந்த அந்த வாலிபரை தேடி வருகிறார்கள். திருச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரகசியமாக போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதையும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்