போலீசாரை திட்டிய வாலிபர் கைது
போலீசாரை திட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
குளித்தலை அருகே உள்ள ராஜேந்திரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தில்லைகண்ணன் (வயது 29). இவர் மது அருந்திவிட்டு கடம்பர் கோவில் பகுதியில் பொது இடத்தில் நின்று தரக்குறைவாக பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது போலீசார் அங்கு சென்றபோது அவர்களையும் திட்டியுள்ளார். இதையடுத்து தில்லைக்கண்ணன் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.