காட்டுப்பன்றியை வேட்டையாடிய வாலிபர் கைது

கடையநல்லூர் அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய வாலிபரை வனத்துறையினர் கைது செய்தனர்.

Update: 2023-01-08 18:45 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே ஆய்க்குடி பகுதியில் கன்னி வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடுவதாக மாவட்ட வன அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின்பேரில் ரேஞ்சர் சுரேஷ் தலைமையில் மேக்கரை பிரிவு வனவர் அம்பலவாணன், கடையநல்லூர் பிரிவு வனவர் முருகேசன், வனக்காப்பாளர்கள் அய்யப்பன், ராமசந்திரன், ராஜா, வனக்காவலர் சத்யா, ஆனந்த், வேட்டை தடுப்பு காவலர் சுப்புராஜ் ஆகியோர் ஆய்குடி பீட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கம்பிளி சுடுகாட்டு பகுதியில் காட்டுப்பன்றியை கன்னி வைத்து வேட்டையாடி கறியை வெட்டிக் கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், கம்பிளி கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் சுரேஷ் (வயது 20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்