தொழிலாளியின் கையை வெட்டிய வாலிபர் கைது

தக்கலை அருகே தொழிலாளியின் கையை வெட்டிய வாலிபர் கைது

Update: 2023-03-14 18:59 GMT

தக்கலை,

தக்கலை அருகே உள்ள சாய்கோடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது30), தொழிலாளி. இவரும் காட்டாத்துறை கவியலூர் பகுதியை சேர்ந்த சஜில்ராஜ் (31) என்பவரும் சம்பவத்தன்று இரவு சரல்விளை கிறிஸ்தவ ஆலயம் அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத நபர் அங்கு வந்தார். அவரிடம் இரவு நேரத்தில் யாரை தேடி வந்தாய் என இருவரும் கேட்டுகொண்டிருந்தனர்.அந்த சமயம் அதே பகுதியில் வசிக்கும் சஜீவன்ராஜ் (24) என்பவர் வந்து என்னை தேடி வந்தவரிடம் எதற்காக கேள்வி கேட்கிறீர்கள் என கெட்டவார்த்தையில் பேசியுள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சஜீவன்ராஜ் திடீரென அவரது வீட்டிற்குள் சென்று வெட்டருவாளை எடுத்து வந்து, கிருஷ்ணகுமாரின் நெற்றியிலும், கையிலும் வெட்டியுள்ளார். இதில் கிருஷ்ணகுமாரின் வலதுகை மணி கட்டின் கீழே துண்டாகி விழுந்தது. உடனே அருகில் நின்ற சஜில் ராஜ் அவரை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

 அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சஜீவன்ராஜ் மீது கொலை முயற்சி வழக்குபதிவு செய்து போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று மாலையில் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப் -இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் ஆகியோர் சஜீவன்ராஜை கைது செய்தனர், பின்னர் பத்மநாபபுரம் கோர்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்