கோவில் சாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்திய வாலிபர் கைது

கோவில் சாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்திய வாலிபர் கைது

Update: 2023-04-13 20:02 GMT

திருவோணத்தை அடுத்துள்ள பாதிரங்கோட்டை தெற்கு கிராமத்தில் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் இருந்த முனீஸ்வரர், செல்லிவெட்டி உள்ளிட்ட சிமெண்டால் செய்யப்பட்டிருந்த சாமி சிலைகளை நேற்றுமுன்தினம் சிலர் அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இதனை அறிந்த கிராம மக்கள் கோவிலில் திரண்டனர். இவர்கள் சாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னா சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதுகுறித்து பாதிரங்கோட்டையை சேர்ந்த அருணாச்சலம் (வயது55) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் திருவோணம் போலீசார் பாதிரங்கோட்டையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், செல்வராஜ், அழகு, நந்தகுமார் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய நந்தகுமார் (24) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்