அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது
அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது ெசய்தனர்.
திருவண்ணாமலை பகுதியில் இருந்து நேற்று காலை 11 மணி அளவில் அரசு பஸ் சங்கராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை, சங்கராபுரம் அருகே உள்ள எஸ்.வி.பாளையம் பகுதியை சேர்ந்த சின்னையன் மகன் முருகன் (வயது 38) ஓட்டினார்.
பெருந்துறைபட்டு ஈ.பி. அலுவலகம் அருகே வந்்த போது மர்ம நபர் ஒருவர் பஸ் மீது கல்வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து வாணாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கல்வீசியது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் வாணாபுரம் அருகே உள்ள மழுவம்பட்டு பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் வெங்கடேசன் (வயது 32) என்பது தெரியவந்து.
தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தார்.