தஞ்சை சேவப்பநாயக்கன்வாரி பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 32). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் சீனிவாசபுரம் பூங்கா அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மேலவீதியை சேர்ந்த ரகுவரன் (22) மற்றும் அவருடைய சகோதரர் ராஜா ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர்களிடம் கந்தசாமி கேட்ட போது அவர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் படுகாயம் அடைந்த கந்தசாமி மற்றும் ராஜா ஆகிய 2 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கந்தசாமி தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் அதன்பேரில் போலீசார் ராஜா மற்றும் ரகுவரன் மீது வழக்குப்பதிவு செய்து ரகுவரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.