போக்சோவில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ஒட்டன்சத்திரத்தில் போக்சோவில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ஒட்டன்சத்திரம் காந்தி நகரை சேர்ந்தவர் மாரீஸ்வரன் (வயது 22). கடந்த மாதம் 13-ந் தேதி இவர், 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த நிலையில் மாரீஸ்வரன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அனுமதிக்கும்படி மாவட்ட கலெக்டர் விசாகனிடம் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாரீஸ்வரன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
இதையடுத்து போலீசார் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.