இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

வாணியம்பாடியில் இளம்பெண் ஒருவர் வெளிநாட்டில் இருக்கும் கணவருக்கு வீடியோகால் செய்து, அவர் கண் முன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-12 18:19 GMT

குடும்ப தகராறு

வாணியம்பாடியை அடுத்த புள்ளாக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன். சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மதிமாலா (வயது 25). திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. கணவன் - மனைவி இடையே அவ்வப்போது செல்போனில் பேசும்போது தகராறு ஈடுபட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று பிற்பகலில் தன்னுடைய கணவனுடன் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த மதிமாலா வீடியோ கால் மூலம் கணவனுடன் தொடர்பு கொண்டு தான் மிகவும் வேதனை அடைந்துள்ளதாக கூறிக்கொண்டே, கணவன் கண் எதிரிலேயே தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வீடியோகால்

வீடியோகால் மூலம் கணவன் கண் முன் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இறந்து போன மதிமாலாவிற்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் வாணியம்பாடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்