நேற்று ஒரே நாளில் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் வந்து குவிந்தன

அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு நேற்று ஒரே நாளில் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் வந்து குவிந்தன உளுந்துக்கு கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி;

Update:2023-02-14 00:15 IST

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடப்பு பருவத்தில் விவசாய விளைபொருட்கள் அதிக அளவு வரத்து உள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் வந்தன. நெல் ஒரு மூட்டை குறைந்தபட்ச விலை ரூ.1,129 ஆகவும், அதிகபட்சம் ரூ.1,976 ஆகவும் இருந்தது. மணிலா ஒரு மூட்டை குறைந்தபட்சம் ரூ.7,659 ஆகவும், அதிகபட்சம் ரூ.9,779 ஆகவும், எள் ஒரு மூட்டை குறைந்தபட்சம் ரூ.9,999 ஆகவும், அதிகபட்சம் ரூ.13,009 ஆகவும், உளுந்து ஒரு மூட்டை குறைந்தபட்சம் ரூ.6,089 ஆகவும், அதிகபட்சம் ரூ.7,528 ஆகவும், பச்சை பயிர் ஒரு மூட்டை குறைந்தபட்சம் ரூ.6,599 ஆகவும், அதிகபட்சம் ரூ.7,490 ஆகவும் இருந்தது.

அதேபோல் நாட்டுக்கம்பு ஒரு மூட்டை குறைந்தபட்சம் ரூ.7,190 ஆகவும், அதிகபட்சம் ரூ.7,192 ஆகவும், உயர்ரக கம்பு ஒரு மூட்டை குறைந்தபட்சம் ரூ.2,558 ஆகவும், அதிகபட்சம் ரூ.2,630 ஆகவும், கேழ்வரகு ஒரு மூட்டை குறைந்தபட்சம் ரூ.2,430 ஆகவும், அதிகபட்சம் ரூ.2,656 ஆகவும், மக்காச்சோளம் ஒரு மூட்டை ரூ.2,126 ஆகவும், அதிகபட்சம் ரூ.2,239 ஆகவும் இருந்தது.மேலும் பனிப்பயிர் ஒரு மூட்டை குறைந்தபட்சம் ரூ.9,669 ஆகவும் அதிகபட்சம் ரூ.10,619 ஆகவும், தட்டைப்பயிர் ஒரு மூட்டை குறைந்தபட்சம் ரூ.4,289 ஆகவும், அதிகபட்சம் ரூ.6,689 ஆகவும், தேங்காய் ஒரு மூட்டை குறைந்தபட்சம் ரூ.4,339 ஆகவும், அதிகபட்சம் ரூ.4,409 ஆகவும் இருந்தது. அரககண்ட நல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று ஒரே நாளில் 593 மெட்ரிக் டன் தானியங்கள் வரத்து வந்து ரூ.1 கோடியே 71 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்