ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா

ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழாவை ராமநாதபுரம் மன்னர் தொடங்கி வைத்தார்.

Update: 2022-06-23 18:16 GMT


ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் புகழ்பெற்ற மகான் குத்புசுல்தான் செய்யது இப்ராகிம் ஷகீது பாதுஷா நாயகம் தர்கா உள்ளது. இந்த தர்காவில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அனைத்து மதத்தினர் கலந்து கொள்ளும் சந்தனக்கூடு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தர்கா அமைந்துள்ள நிலத்தை ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்கள் தானமாக வழங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி நேற்று மாலை தொடங்கிய 848-வது ஆண்டு சந்தனக்கூடு திருவிழாவை ராமநாதபுரம் சேதுபதி மன்னர் நாகேந்திர சேதுபதி தொடங்கி வைத்தார். தர்காவில் சிறப்பு பிரார்த்தனை நடத்திய அவருக்கு தர்கா ஹக்தார்கள் துல்கருணைபாட்சா, சிராஜ் மற்றும் நிர்வாகிகள் பட்டு போர்வை வழங்கி வரவேற்றனர். விழாவில் பாளையம்பட்டி மன்னர் அஸ்வின் பத்மராஜா, கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்