குடிநீரில் புழுக்கள்; பொதுமக்கள் அதிர்ச்சி

சின்னாளப்பட்டியில் குடிநீரில் புழுக்கள் கலந்து வந்ததால் பொதுமக்கள் அதிரிச்சி அடைந்தனர்.

Update: 2023-09-23 23:15 GMT

சின்னாளப்பட்டியில் கடந்த ஒருவார காலமாக குடிநீர் கலங்கலாக வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால் தண்ணீரை பொதுமக்கள் வடிகட்டி பிடித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று சின்னாளப்பட்டி ஜனதா காலனி பகுதியில் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்பட்ட குடிநீர் கலங்கலாக வந்தது. இருப்பினும் அதனை பொதுமக்கள் துணியால் வடிகட்டி பிடித்தனர். வடிகட்டிய பின்னரும் தண்ணீர் கலங்கலாகவே இருந்தது. மேலும் வடிகட்டிய துணியில் கழிவுநீர் வடிகட்டியது போன்று கருப்பு நிறத்தில் மண், கற்கள் மற்றும் புழுக்கள் இருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். அதற்கு ஏராளமானோர் கருத்துகள் தெரிவித்தனர்.

அப்போது சின்னாளப்பட்டியில் வினியோகம் செய்யப்படும் குடிநீரை சுத்திகரித்து வழங்க வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை முறையாக சுத்தம் செய்ய வேண்டும். அத்துடன் நோய் பரவாமல் தடுக்க குளோரின் கலந்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்