அரசு பள்ளியில் உலக காற்று தினம்

அரசு பள்ளியில் உலக காற்று தினம் கொண்டாடப்பட்டது.

Update: 2023-06-15 18:25 GMT

உலக காற்று தினம் ஜூன் 15-ந் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக காற்று தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கி காற்றின் அவசியத்தையும், காற்று மாசுபாடு, காற்றாலையின் பயன்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து பேசினார். இதையடுத்து விலங்கியல் ஆசிரியை புவனேஸ்வரி பள்ளிக்கு மரக்கன்றுகள் வழங்கினார். அதனை பள்ளி வளாகத்தில் நடப்பட்டது. ஒவ்வொரு மாணவர்களும் வீட்டில் மரக்கன்றுகள் நடவும் கேட்டு கொள்ளப்பட்டது. இதில் உதவி தலைமை ஆசிரியர் ஸ்டாலின் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வரலாற்று ஆசிரியர் மதியழகன் முதியோர் பாதுகாப்புஉறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்