உலக காண்டா மிருக தின விழா
கோவில்பட்டி பள்ளியில் உலக காண்டா மிருக தின விழா கொண்டாடப்பட்டது.
கோவில்பட்டி (மேற்கு):
கோவில்பட்டி ஐ.சி.எம். நடுநிலை பள்ளியில் தேசிய பசுமை படை சார்பில் உலக காண்டாமிருக தின விழா நடத்தப்பட்டது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராதா தலைமை தாங்கினார். பசுமை இயக்க தலைவர் ஜெகஜோதி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாணவர்கள் காண்டாமிருக முகமூடி அணிந்து கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி, உறுதிமொழி எடுத்தார்கள். நிகழ்ச்சியில் தேசிய பசுமைப்படை ஆசிரியர் செல்வகுமார், சமூக ஆர்வலர் முத்து முருகன், ஆசிரியர்கள் அபிலா திரேஷ், பத்மாவதி, செல்லம்மாள், சுப்புலட்சுமி, தனலட்சுமி, ஜெனோவா ஆகியோர் கலந்துகொண்டனர். ஆசிரியர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.