நிம்மியம்பட்டில் உலக மக்கள் தொகை தினம்
நிம்மியம்பட்டில் உலக மக்கள் தொகை தின விழா நடந்தது.;
வாணியம்பாடிநிம்மியம்பட்டில் உலக மக்கள் தொகை தின விழா நடந்தது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் வட்டாரத்திற்குட்பட்ட நிம்மியம்பட்டு கிராமத்தில் உலக மக்கள்தொகை தினம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் எழிலரசி வெங்கடேசன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் பிரீத்தா பழனி முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி கலந்துகொண்டு மக்கள் தொகை உயர்வின் விளைவுகள், மக்கள் தொகை கட்டுப்படுத்தலின் அவசியம் மற்றும் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிம்மியம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் சற்குணகுமார், சுகாதார ஆய்வாளர்கள், தொழிற்சாலை நிர்வாக அலுவலர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.