உலக மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு ஊர்வலம்

வேதாரண்யம், தகட்டூரில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2022-11-16 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் ஒன்றியம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) மலர்கொடி தொடங்கி வைத்தார்.இதில்,நகர் மன்ற வார்டு உறுப்பினர் மயில்வாகணன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் அசோக்குமார், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரியப் பயிற்றுனர்கள், பள்ளி ஆசிரியர்கள், மற்றும் சிறப்புக் கல்வி பயிற்றுனர்கள் மற்றும் 100-க்கு மேற்பட்ட பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர்.இதேபோல் வாய்மேட்டை அடுத்த தகட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு தகட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தனக்குமார் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பூமிநாதன் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவி ஜெயா வீரமணி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முன்னதாக பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சுவாமிநாதன் வரவேற்றார்.முடிவில்ஆசிரியர் விஸ்வநாதன் நன்றி கூறினார். ஊர்வலம் பள்ளியில் இருந்து வாய்மேடு கடைத்தெரு வழியாக பள்ளியை வந்தடைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்