வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா

வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் நடந்த உலக தாய்ப்பால் வார விழாவை கலெக்டர் தொடங்கிவைத்தார்.;

Update:2022-08-02 22:40 IST

வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்துறையின் மூலமாக உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். இணை இயக்குனர் மருத்துவர் லட்சுமணன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி வரவேற்றார்.

விழாவில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உலக தாய்ப்பால் வார விழாவினை தொடங்கி வைத்து பேசுைகயில் 'பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர தாய்ப்பால் மிகவும் இன்றியமையாதது. தாய்ப்பால் அளிக்கும் போது தாய்க்கும், குழந்தைக்கும் ஆரோக்கியத்தை கொடுக்கும். பிறந்த குழந்தைகளுக்கு முதல் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும். அப்பொழுதுதான் குழந்தைகளின் மூளை வளர்ச்சி சீராக வளர்ந்து ஆரோக்கியமான நோயற்ற குழந்தையாக வளர முடியும். தாய்ப்பால் வழங்காத தாய்மார்கள் மார்பக புற்றுநோய் பிரச்சினைக ைள எதிர்கொள்கின்றனர். இதனை தாய்மார்கள் புரிந்து கொள்ள வேண்டும். தாய்ப்பால் சாப்பிடும் குழந்தைகளே ஆரோக்கியமாக வாழ முடியும்' என்றாா்.

இதனை தொடர்ந்து அனைவரும் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். பின்னர் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து அடங்கிய சத்துணவு வழங்கப்பட்டது. இதில் மருத்துவமனை மருத்துவ அலுவலர் உஷா நந்தினி மற்றும் மருத்துவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்