வேலை நேரத்தை உயர்த்துவதை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

வேலை நேரத்தை உயர்த்துவதை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-04-22 21:28 GMT

தமிழகத்தில் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கும் தமிழ்நாடு அரசின் தொழிற்சாலைகள் மசோதா நேற்று முன்தினம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதை கண்டித்தும், அந்த மசோதாவை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி, திருச்சியில் மரக்கடை ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் அன்சர்தீன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அபுதாகீர், சுரேஷ்முத்துசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் க.சுரேஷ், தலைவர் நடராஜா, பொருளாளர் ராமராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி கண்டனம் தெரிவித்து பேசினர். மாவட்ட நிர்வாகிகள் சிவா, பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்