கன்னியாகுமரியில் அரசு விரைவு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரியில் அரசு விரைவு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-04-19 21:04 GMT

தென்தாமரைகுளம்:

கன்னியாகுமரி அரசு விரைவு போக்குவரத்து கழக சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் தமிழக அரசு டிரைவர்களை காண்டிராக்டு முறையில் நியமிக்க கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பணிமனை தலைவர் தங்கப்பன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் செர்க்கான், அரசு போக்குவரத்து கழக சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொதுச் செயலாளர் ஸ்டீபன் ஜெயக்குமார், மாவட்ட நிர்வாகி சோபன ராஜ் ஆகியோர் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி கூறினார்கள். இதில் தொழிற்சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்