பாலக்கோட்டில்கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

Update: 2023-08-10 19:45 GMT

பாலக்கோடு

பாலக்கோட்டில் மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள், பணியாளர்கள், கரும்பு உதவியாளர்கள் மற்றும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் அண்ணா தொழிற்சங்கம், பாட்டாளி தொழிற்சங்கம், டாக்டர் அம்பேத்கார் தொழிற்சங்கம், பணியாளர் தொழிற்சங்கம், கரும்பு உதவியாளர் தொழிற்சங்கம், விவசாய தொழிற்சங்கங்கள் ஆகிய தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் 33 ஆண்டுகளாக தினக்கூலியாக பணியாற்றி வரும் தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும். சர்க்கரை ஆலை ஊழியர்களின் இரட்டை ஊதிய முறையை களைந்து அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்