ஊட்டி
ஊட்டி மத்திய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வனக்குமார் மற்றும் போலீசார் நேற்று ஏ.டி.சி. பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரிடம் இருந்த பையை சோதனை செய்தனர். அதில் மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் லவ்டேல் அண்ணா நகரை சேர்ந்த தொழிலாளி ராஜன் (வயது 58) என்பதும், சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 47 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.