கார் மோதி தொழிலாளி சாவு
ஒரத்தநாடு அருகே கார் மோதி தொழிலாளி உயிரிழந்தார்.
ஒரத்தநாடு;
ஒரத்தநாடு அருகே கார் மோதி தொழிலாளி உயிரிழந்தார்.
கார் மோதியது
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள தொண்டராம்பட்டு கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து. இவருடைய மகன் வீரையன் (வயது35). கூலித்தொழிலாளி, இவர் நேற்று மாலை பாப்பாநாட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் தொண்டராம்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தார். கொத்தகைகாடு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த ஒரு கார் வீரையன் மீது மோதியது.
பரிதாப சாவு
இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய வீரையனை அக்கம்பக்கத்தினர் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வீரையன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாப்பாநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.