கார் மோதி தொழிலாளி பலி

கார் மோதி தொழிலாளி பலியானார்.;

Update:2023-07-23 01:00 IST

திருமங்கலம்

திருமங்கலம் அருகே சுவாமிமல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மலைச்சாமி (வயது 45). இவர் சிவரக்கோட்டையில் உள்ள ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துவிட்டு மீண்டும் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றார். அப்போது விருதுநகரில் இருந்து திருமங்கலம் நோக்கி சென்ற கார் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த மலைச்சாமி சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே மலைச்சாமி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்